காங்கிரஸ் தலைவராக சோனியா தொடர வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்
காங்கிரஸ் கூட்டம் கூடும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும் என கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கூட்டம் கூடும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர வேண்டும் என கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை விவகாரம் பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்த சூழலில் இன்று (திங்கள்கிழமை) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
இதன்பிறகு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"காங்கிரஸ் கட்சியின் கூட்டம் கூடுவதற்கான சூழல் உருவாகும் வரை சோனியா காந்தியே கட்சியை வழிநடத்த வேண்டும் என செயற்குழுவில் ஒருமனதாக கேட்டுக்கொள்ளப்பட்டது. கட்சியின் முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள கட்சியின் அமைப்பு முறையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்த செயற்குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...