ஜம்மு காஷ்மீரில் அமையவுள்ள உலகின் உயரமான ரயில்வே மேம்பாலப் பணிகள் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம் அமைய உள்ளது. ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மேம்பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
ரியாசியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 1.3 கிமீ தூரம் அமைக்கப்படும் இந்தப் பாலம் ரிக்டர் அளவில் 7 க்கும் அதிகமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கி வருகிறது.
துணை தலைமை பொறியாளர் ஆர்.ஆர்.மாலிக், "கடினமான நிலப்பரப்பில் மேம்பாலம் கட்டுவது சவாலானது. ரியாசி ரயில்வே மேம்பாலம் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வட சென்னை 2 : தனுஷ் அறிவிப்பு!

திருவெண்காட்டில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தலைவலி, உடல் வலிக்கு மாத்திரை சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள்!! | அறிவியல் ஆயிரம்

அவிநாசி அருகே குட்டை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

