ஒடிசா மாநிலத்தில் உயர்சாதியினர் தோட்டத்தில் பூக்களைப் பறித்த தலித் சிறுமியின் செயலுக்கு ஒட்டுமொத்த தலித் குடும்பத்தினரை ஒத்திவைத்த தீண்டாமை கொடூரம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக தொடரும் சாதிக் கொடுமைக்கு மேலும் ஆதாரமாக சமீபத்திய நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. ஒடிசாவில் தெங்கனல் மாவட்டத்தின் கான்டியோ கட்டேனி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்சாதியினரின் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்சாதியினர் அந்த சிறுமியையும் அவரது பெற்றோர்களையும் மன்னிப்பு கேட்க வைத்து நிர்பந்தித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோரும் கிராம பஞ்சாயத்திடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியுள்ளனர்.இருந்தும் உயர்சாதியினர் அவர்களுக்கு தண்டனையாக, தலித் குடும்பங்கள் கிராம சடங்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளனர். மேலும் கிராமத்தில் தலித் குடும்பத்தினர் யாருடனும் பேச அனுமதி மறுத்தும், அரசு ரேஷன் கடைகளில் இருந்து பொருள்களை வாங்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தலித் சமூகத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

