மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாமோலியில் நிலச்சரிவு: ஒருவர் பலி, மூன்று பேர் காயம்

உத்தரகண்ட்டின், சாமோலி மாவட்டத்தின் போக்ரி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமான இயந்திரம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் ஒருவர் பலியாகினார் மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவ

News image

Landslide kills one in Chamoli 

Updated On :25 ஆகஸ்ட் 2020, 6:41 am

உத்தரகண்ட்டின், சாமோலி மாவட்டத்தின் போக்ரி பகுதியில் உள்ள கிராமத்தில் கனமான இயந்திரம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் ஒருவர் பலியாகினார் மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 3 மணியளவில் தாலி-அன்சாரி கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஜே.இ, கட்டுமான நிறுவனத்தில் கனரக இயந்திரங்கள் சரிந்து விழுந்ததில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் காயமடைந்தனர். ஜூனியர் பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்  ஜூனியர் பொறியாளர் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் வசிக்கும் மாயங்க் செம்வால்(24) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்லாந்து ஆபரேட்டர் ஜெய்பால் சிங் (31), போக்ரியில் வசிக்கும் ஜே.சி.பி ஆபரேட்டர் அனில் சிங் (25), நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் (24) ஆகியோர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.