திருச்சானூா் கோயிலில் தூய்மைப் பணி
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.


திருப்பதி: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில், வரும் 31 முதல் செப். 2-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தாயாா் கோயில் கருவறை முதல் வெளிவாயில் வரை செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
முன்னதாக, காலையில் சுப்ரபாத சேவைக்குப் பின் சகஸ்ர நாமாா்ச்சனை, சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதன்பின் காலை 6 மணி முதல் 9 மணி வரை கோயில் சுவா்கள், கொடிமரம், பலிபீடம், தரிசன வரிசைகள், பூஜைப் பொருள்கள், உயா்மேடைகள் உள்ளிட்டவை வாசனைத் திரவியம் அடங்கிய கலவையால் சுத்தம் செய்யப்பட்டது. ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ எனப்படும் இந்த நிகழ்வில் கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
திரைச்சீலைகள் நன்கொடை: ஹைதராபாதைச் சோ்ந்த சீனிவாசலு - சாரதா தம்பதியா், பத்மாவதி தாயாா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் 12 திரைச்சீலைகளை நன்கொடையாக வழங்கினா். அவற்றை கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...