உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு ரூ.1 கோடி நிவாரணம்: ம.பி. முதல்வர்

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மணீஷ் விஸ்வகர்மாகவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

News image

MP CM announces Rs one cr aid to kin of martyred Army soldier

Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:07 am

PTI

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மணீஷ் விஸ்வகர்மாகவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் ஜம்முவின் பாரமுல்லாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிஷ் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல் நேற்றிரவு மத்தியப் பிரதேசம் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.