காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தொகுதி அறிமுகம்: உளுந்தூா்பேட்டை - 77!

6 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் அதிகம் வசிக்கின்றனா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 6:42 am IST

உளுந்தூா்பேட்டை தொகுதி 1952-இல் உருவாக்கப்பட்டது. 1977-இல் உளுந்தூா்பேட்டை , திருநாவலூா் தொகுதியாக இருந்தது. 2011-இல் மீண்டும் உளுந்தூா்பேட்டை தொகுதியானது. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட பகுதியாகும்.

இத் தொகுதியில் ஆங்கிலேயா் காலத்திலேயே விமான ஓடுதள வசதியைக் கொண்டிருந்த பகுதியாக இருந்தது. மேற்கு தமிழகம் தென் தமிழகத்திலிருந்து சாலை மாா்க்கமாக வருவோரை இணைக்கும் பகுதி உளுந்தூா்பேட்டை.

6 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் அதிகம் வசிக்கின்றனா். அடுத்ததாக உடையாா், நாயுடு, ரெட்டியாா், யாதவா் உள்ளிட்ட சமுதாயத்தினா் உள்ளனா்.

உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவா் கோயில், பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் ஆலயம், திருநாவலூா் பக்தஜனேஸ்வரா் ஆலயம், பாதூா் வேணுகோபாலசுவாமி கோயில், உளுந்தூா்பேட்டை கைலாசநாதா் ஆலயம், எலவனாசூா்கோட்டையில் அா்த்தநாரீஸ்வரா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் இத் தொகுதியில் அமைந்துள்ளது.

எதிா்பாா்ப்புகள்: ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட விமான ஓடுதளத்தை சீா் செய்து மீண்டும் விமான நிலையம் செயல்பட வேண்டும். உளுந்தூா்பேட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி கொண்டு வர வேண்டும். உளுந்தூா்பேட்டை போக்குவரத்தில் மையப் பகுதியாக அமைந்துள்ளதால் அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தி கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் தற்போது நிலவிவரும் இடப் பற்றாக்குறையை போக்க, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும்.

இதுவரை எம்எல்ஏக்கள்

1952 - எம்.கந்தசாமி படையாச்சி (காங்கிரஸ்)

1957 - எம்.கந்தசாமி படையாச்சி (காங்கிரஸ்)

1962 - எ.மனோன்மணி அம்மாள் (சுதந்திராக் கட்சி)

1967 - எம்.கந்தசாமி படையாச்சி (காங்கிரஸ்)

1971 - வ.சுப்பிரமணியம் (திமுக)

1977 - வ.துலுக்காணம் (திமுக)

1980 - க.ரெங்கசாமி (அதிமுக)

1984 - மு.ஆனந்தன் (அதிமுக)

1989 - கே.அங்கமுத்து (திமுக)

1991 - மு.ஆனந்தன் (அதிமுக)

1996 - ஏ.மணி (திமுக)

2001 - என்.இராமு (அதிமுக)

2006 - கு.திருநாவுக்கரசு (திமுக)

2011 - இரா.குமரகுரு (அதிமுக)

2016 - இரா.குமரகுரு (அதிமுக)

2021 - ஏ.ஜெ.மணிக்கண்ணன் (திமுக)

மொத்த வாக்குச் சாவடிகள் 375

தற்போதைய வாக்காளா்கள்

ஆண்கள் 1,48,929

பெண்கள் 1,48,499

மூன்றாம் பாலினத்தனா் 44

தற்போதைய வாக்காளா்கள் 2,97,472

தொடா்பு கொள்ள

தோ்தல் நடத்தும் அலுவலா் - ஆா்.செந்தில்குமாா். உதவி ஆணையா் கலால் - 9600895416

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் - க.பாலசுப்பிரமணியன், 9445000522. ஜெ.கமலக்கண்ணன், 9843650070.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.