/

ஹைதராபாத் மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த 4 கைதிகள் தப்பியோட்டம்

ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த நான்கு கைதிகள் வியாழக்கிழமை அதிகாலை தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

4 prisoners undergoing Covid treatment at Hyderabad hospital escape

Updated On :27 ஆகஸ்ட் 2020, 11:28 am

ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த நான்கு கைதிகள் வியாழக்கிழமை அதிகாலை தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் நால்வரும் மருத்துவமனையில் இரண்டாவது கட்டடத்தில் உள்ள குளியலறையின் ஜன்னல் இரும்புக் கம்பியை அகற்றிவிட்டு, தப்பியோடி உள்ளனர். 

அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினரால்  சந்தேகிக்கப்படுகின்றது. தப்பிச் சென்ற குற்றவாளிகளைக் கண்டறியச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஸ்கேன் செய்து வருகின்றனர். கடுமையான பாதுகாப்பு இருந்தபோதிலும் கைதிகள் எவ்வாறு தப்பிக்க முடிந்தது என்று மூத்த காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு கைதிகள் சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவர் செர்லப்பள்ளி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள். இவர்களில் ஒருவர் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

கடந்த சில நாள்களில் தொற்று பாதிக்கப்பட்ட 10 கைதிகளில் தப்பியோடிய நால்வரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.