அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பணியாளர்கள் ஜீன்ஸ் அணியத் தடை: ஏர் இந்தியா கட்டுப்பாடு

ஏர் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2020, 3:15 pm

DIN

ஏர் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பணிப்பகுதிகளில் சுகாதாரமற்ற உடைகளை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் அலுவலகங்களில் டீ சர்ட் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தக் கூடாது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா கண்ணியக்குறைவான உடைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

துணிகள் நன்கு சலவை செய்யப்பட்டதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏர் இந்தியா எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.