2030ல் இந்திய ரயில்வேயின் கார்பன் உமிழ்வு அறவே இருக்காது: பியூஷ் கோயல்
இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியேற்றம் 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாகக் குறையும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியேற்றம் 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாகக் குறையும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக அள்ள கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய ரயில்வே துறை அமைச்சர் தனது சுட்டுரைப்பதிவில் இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியீடு நிலை குறித்து பதிவிட்டுள்ளார்.
புதன்கிழமை வெளியிட்டுள்ள அவரது காணொலியில் 2023 டிசம்பருக்குள் இந்தியா 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் இதனால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியேற்றம் பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
என்ஐடிஐ ஆயோக் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் ரயில்வேயில் இருந்து கார்பன் வெளியேற்றம் 6.84 மில்லியன் டன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...