நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு சீரடைந்தது: ராணுவ மருத்துவமனை

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு சீரடைந்ததாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

Pranab Mukherjee's renal parameters improve, continues to be on ventilator support, says Hospital.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 9:44 am

UNI

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு சீரடைந்ததாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். மூளையில் உறைந்திருந்த ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஆழ்ந்த மயக்க நிலைக்கு (கோமா) சென்றாா். ராணுவ மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியானது.

இந்த நிலையில், அவருக்கு நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது சிறுநீரக செயல்பாடுகளில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.