திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி

நாட்டின் 8 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 2.3 சதவீதமாகக் குறைந்தது.

News image

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 12:49 am IST

நாட்டின் 8 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த பிப்ரவரியில் 2.3 சதவீதமாகக் குறைந்தது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி கடந்த ஜனவரியில் 4 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் அது 2.3 சதவீதமாகச் சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பிப்ரவரியில் 5.2 சதவீதம் சரிவைச் சந்தித்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் இத்துறை 2.5 சதவீதம் சரிந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையிலும், கடந்த மாதத்தைப் போல 5 சதவீத உற்பத்திச் சரிவு நீடிக்கிறது.

எட்டு துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி, கடந்த மாதம் மாற்றமின்றி இருந்த நிலையில் பிப்ரவரியில் 1 சதவீதம் சரிந்தது.

சிமெண்ட் உற்பத்தி 9.3 சதவீதமும், எஃகு உற்பத்தி 7.2 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்தன. இருப்பினும், ஜனவரியுடன் ஒப்பிடுகையில் (சிமெண்ட் 11.3 சதவீதம் , எஃகு 11.5 சதவீதம்) இது குறைவாகும். அதேபோல், உரத் துறை 3.4 சதவீதமும், நிலக்கரித் துறை 2.3 சதவீதமும் வளா்ச்சியைப் பெற்றன.

தொழில்துறை உற்பத்தியில் பாதிப்பு: நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் (ஐஐபி) இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு சுமாா் 40 சதவீதமாகும்.

ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் தொழில்துறை வளா்ச்சி 0.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.

தற்போது பிப்ரவரி மாதத்திலும் உள்கட்டமைப்புத் துறைகள் மந்தமாக இருப்பதால், இது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியைப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.