புதுதில்லி: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய காலே நேர வர்த்தகத்தில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகள் 3 சதவீதம் வரை சரிந்தன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சந்தித்து வரும் இழப்புகளுக்கு மத்தியில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக எரிபொருள் விலை உயர்வு உயர்த்தப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் 2.71 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் 2.39 சதவீதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் 1.85 சதவீதம் சரிந்தன.
முக்கிய மூலப்பொருட்களாக கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தும் பெயிண்ட் உற்பத்தியாளர்களின் பங்குகளும் சரிவுடன் வர்த்தகமானது.
இண்டிகோ பெயிண்ட்ஸ் 1.36 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 0.42 சதவீதமும் மற்றும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் 0.14 சதவீதம் சரிந்தன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, பிப்ரவரியில் பேரலுக்கு ஒன்றுக்கு ஏறக்குறைய 69 அமெரிக்க டாலரிலிருந்து 120 அமெரிக்க டாலருக்கும் மேலாக உயர்ந்து, தற்போது 107 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருப்பதால், அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்டவையால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அழுத்தத்தில் உள்ளன.
Summary
Shares of oil marketing companies and paint manufacturers declined up to 3 per cent in early trade on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் உயர்வு!







