ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா நெறிமுறைகளுடன் ஓணம் கொண்டாடவும்: பினராயி விஜயன்

கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

News image
கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும்: முதல்வர் பினராயி விஜயன்
Updated On :29 ஆகஸ்ட் 2020, 1:18 pm

DIN

திருவனந்தபுரம்: கரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது, ''கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளோம். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை மக்களுக்கு நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் வழங்க வேண்டும். கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

''ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற முடிவில் கேரள அரசு உறுதியாக உள்ளது. மாநிலங்களுக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசு தரவேண்டியது அரசியலமைப்பு உரிமை'' என்று கூறினார்.

மேலும், ''கரோனாவால் புதிதாக 2,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது''. என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.