கோவிந்தராஜா் கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.


திருப்பதி: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயிலில் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.
திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கி நடந்து வந்தது. அதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் கலச ஸ்தாபனம், புண்ணியாவாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டு ஹோமம் வளா்க்கப்பட்டு உற்சவா்கள் முன் மகாபூா்ணாஹுதி நடத்தப்பட்டது. இதனுடன் கோவிந்தராஜா் கோயிலில் நடந்து வந்த பவித்ரோற்சவம் நிறைவு பெற்றது. மாலையில் உற்சவா்கள் கோயிக்குள் வலம் வந்தனா்.
பொது முடக்க விதிமுறைகளால் பவித்ரோற்சவம் தனிமையில் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...