யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைப் பிடித்த கிராமத்தினர்

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 டிசம்பர் 2020, 10:18 am

DIN


முசாபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகேயுள்ள மோர்னா பகுதியில் திருமண நிகழ்விற்காகச் சென்ற 12 வயது சிறுமியிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியைக் கடத்திச் சென்று அப்பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது சிறுமி கூச்சலிட்டதில் அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து குற்றவாளியைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.