நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 80க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

News image

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை (கோப்புப்படம்)

Updated On :4 டிசம்பர் 2020, 5:43 am

DIN

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 80க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியில் கடந்த 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 46.55 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 30 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 8,152 பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுகின்றன.

இதனிடையே தற்போது 11 மணி நிலவரப்படி ஹைதரபாத்தில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் 80-க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 30-க்கும் அதிகமான இடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை வகித்து வருகிறது.

அசாதுதீன் ஓவைசியின் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.