ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

News image
Updated On :4 டிசம்பர் 2020, 2:38 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. 
இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது. 
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 
சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய தரப்பிலிருந்தும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.