கர்நாடகத்தில் விரைவில் லவ் ஜிகாத், பசுவதைக்கு எதிராக சட்டம்: துணை முதல்வர் உறுதி

கா்நாடகத்தில் ‘லவ் ஜிகாத்’ மற்றும் பசு வதையைத் தடுக்க சட்டம் இயற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண்
கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண்

கா்நாடகத்தில் ‘லவ் ஜிகாத்’ மற்றும் பசு வதையைத் தடுக்க சட்டம் இயற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயண் சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருமணத்திற்காக செய்யப்படும் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு லவ் ஜிகாத் சட்டத்தை சமீபத்தில் இயற்றியது. பாஜக ஆளும் மாநிலமான மத்தியப்பிரதேசமும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டமியற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஸ்வத்நாராயணன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பசு வதை மற்றும் லவ் ஜிகாத்துக்கு எதிரான மசோதா அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, பெங்களூரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

காதல், திருமணம் என்ற பெயரில் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com