ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா

கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 டிசம்பர் 2020, 4:25 pm


கேரளத்தில் மேலும் 3,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2,859 பேருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 328 பேருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. 

இதைத் தொடர்ந்து, கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 59,467 ஆகியுள்ளது. மேலும் 4,705 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, நோய்த் தொற்றிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,77,616 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 23 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,441 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.