புது தில்லி: இந்தியா இன்று முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று 4 லட்சத்துக்கும் கீழ் (3,96,729) குறைந்தது. இது மொத்த பாதிப்பில் 4.1 சதவீதம்.
கடந்த 140 நாளில் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 20ம் தேதி அன்று, கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,459 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பாதிப்பை, விட குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போக்கு, கடந்த 10 நாட்களாகத் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 32,981 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 39,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருதரப்பினர் இடையேயான வித்தியாசம் 6,128 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 6,519 பேர் குறைந்துள்ளனர்.
பத்து லட்சம் பேருக்கு, புதிதாக பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வீதமும் உலகளவில் ஒப்பிடும் போது, நம் நாட்டில் குறைவாக உள்ளது. கடந்த 7 நாள்களாக பத்து லட்சம் பேருக்கான புதிய பாதிப்பு 182 ஆக உள்ளது.
பத்து லட்சம் பேருக்கு, கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், இந்தியாவில் குறைவாக உள்ளது. உலகளவில் பத்து லட்சம் பேருக்கு 8,438 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இந்த அளவு 6,988 ஆக உள்ளது. புதிய பாதிப்பை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைவோர் வீதம் 94.45 சதவீதமாக இன்று அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 91,39,901-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 87 லட்சத்தைக் (87,43,172) கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். 157 நாள்களுக்குப்பின் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 400க்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், பத்து லட்சம் மக்கள் தொகைக்கான உயிரிழப்பு எண்ணிக்கை வீதமும் நம் நாட்டில் குறைவாக உள்ளது. பத்து லட்சம் மக்கள் தொகையில், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உள்ளது. மொத்த எண்ணிக்கை அடிப்படையிலும், பத்து லட்சம் பேருக்கான உயிரிழப்பு இந்தியாவில் 101 ஆக உள்ளது. இதுவும் உலகளவில் மிகவும் குறைவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


