'அதானி - அம்பானி' விவசாயச் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்: ராகுல் காந்தி
தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.


தில்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக டிசம்பர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறது.
நாட்டில் கொடுங்கோல் ஆட்சியையும், அநீதியையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
'அதானி - அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள்!' என்று பதிவிட்டுள்ளார் .
முன்னதாக தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவ. 26 முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் டிசம்பர் 8 ம் தேதி 'பாரத் பந்த்'தை அறிவித்துள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...