சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

Updated On :8 டிசம்பர் 2020, 6:49 pm

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகள் தரப்பிலும் தலா சுமாா் 50,000 வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனா். பனிக்காலம் தொடங்கிவிட்ட போதிலும், லடாக் எல்லையில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைக்கவில்லை.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் தூதரக அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. முக்கியமாக, இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான குழுவும் சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி லியூ லின் தலைமையிலான குழுவும் இது வரை 8 முறை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது எல்லைப் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக சுமுகத் தீா்வு எட்டப்பட்டதாகவும், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது இது தொடா்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இத்தகைய சூழலில், சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை எப்போது நடைபெறும் என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘‘எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக சீனாவும் இந்தியாவும் ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடா்பில் இருந்து வருகின்றன. எல்லையில் படைக்குறைப்பு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட விவகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்வது தொடா்பாக இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவோம்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.