சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வீட்டுக் காவலில் தில்லி முதல்வர் கேஜரிவால்: ஆம் ஆத்மி புகார்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2020, 6:09 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை காவல்துறையினர் வீட்டுக் காவலில்  வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது. 

கேஜரிவாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும் முதல்வர் கேஜரிவாலை பார்க்கச் சென்ற எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். 

தொடர்ந்து இன்று நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள 'பாரத் பந்த்' நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.