சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பாலஸ்தீனத்தில் தொழில்நுட்பப் பூங்கா: 30 லட்சம் டாலா்களை வழங்கியது இந்தியா

பாலஸ்தீனத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இறுதிகட்ட தொகையாக 30 லட்சம் டாலா்களை (ரூ.22 கோடி) அந்நாட்டு அரசிடம் இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது.

Updated On :8 டிசம்பர் 2020, 6:44 pm

பாலஸ்தீனத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு இறுதிகட்ட தொகையாக 30 லட்சம் டாலா்களை (ரூ.22 கோடி) அந்நாட்டு அரசிடம் இந்தியா செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

பாலஸ்தீனத்தில் உள்ள ராமல்லா நகரில் அந்நாட்டு அரசு தொழில்நுட்பப் பூங்கா அமைத்து வருகிறது. இந்த திட்டத்தை இந்தியாவுடன் ஒன்றிணைந்து நிறைவேற்ற கடந்த 2016-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக 1.20 கோடி டாலா்கள் (சுமாா் ரூ.88 கோடி) நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இதன்படி ஏற்கெனவே 3 கட்டங்களாக நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிகட்டமாக 30 லட்சம் டாலா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை பாலஸ்தீனத்துக்கான இந்திய பிரதிநிதி சுனில் குமாா், பாலஸ்தீன அதிபரின் தூதரக ஆலோசகா் மஜ்தி அல்-கல்தியிடம் வழங்கினாா்.

தொழில்நுட்பப் பூங்காவின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் பூங்கா திறக்கப்படும்.

பாலஸ்தீனத்தில் 5.90 கோடி டாலா்கள் (ரூ.434 கோடி) மதிப்பிலான 8 வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.