/

உணவைத் தொட்டதற்காக கொல்லப்பட்ட தலித் இளைஞர்!

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் விருந்தின்போது, ​​தங்கள் உணவைத் தொட்டதாக 25 வயது தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 டிசம்பர் 2020, 12:35 pm

மத்தியப் பிரதேசத்தில் விருந்தின்போது, ​​உணவைத் தொட்டதற்காக 25 வயது தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டம் கிஷான்பூர் கிராமத்தில் புரா சோனி மற்றும் சந்தோஷ் பால் ஆகிய இருவரும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொண்ட தேவராஜ் அனுராகி, அவர்களின் உணவைத் தொட்டதால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த தலித் இளைஞர் தேவராஜ் அனுராகியின் குடும்பத்தினர் இதுகுறித்து கூறும்போது, சோனி மற்றும் சந்தோஷ் பால் ஆகிய இருவரும் வயலில் ஏற்பாடு செய்திருந்த விருந்திற்கு, அழைக்கப்பட்டதன் பேரில் அனுராகி சென்றார். பின்னர் காயங்களுடன் வீட்டிற்குத் திரும்பிய அனுராகி, அவர்களின் உணவைத் தொட்டதற்காக சோனி மற்றும் பால் இருவரும் தாக்கியதாகக் கூறினார். சில நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட்டு அனுராகி' உயிரிழந்தார்' என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவான நிலையில் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.