குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.


வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் தொடர்ந்து 14-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பரிந்துரைகளையும் நிராகரித்து மேலும் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு அளித்தனர்.
தில்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சரத் பவார், டி.கே.எஸ்.இளங்கோவன், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...