நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2020, 5:34 am

DIN

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த ரகசிய தகவலையடுத்து, சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் டிக்கென் என்ற பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இத்தகவலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.