மேற்கு வங்க முன்னாள் முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.


மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா(76) மூச்சுத்திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெண்டிலேட்டர் உதவியுடன் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வெண்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை பெறும் அளவுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவை சீராக உள்ளது.ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மேம்பட்டுள்ளன. எனினும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த பட்டாச்சார்யா, கடந்த சில மாதங்களாக சுவாசப் பிரச்னையாலும், வயது மூப்பு தொடர்பான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவி, மத்தியக் குழு மற்றும் மாநில பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப்பின் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...