அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘என்னிடம் கணக்கு கேட்பதற்கு முன் பி.எம். கேர் நிதிக் கணக்கைத் தாருங்கள்’: மம்தா

மேற்கு வங்கத்திற்கான மத்திய அரசின் நிதிக் கணக்கைக் கேட்பதற்கு முன் பி.எம். கேர் நிதியின் கணக்கை வெளியிடுங்கள் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பதிலளித்துள்ளார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :10 டிசம்பர் 2020, 1:11 pm

DIN

மேற்கு வங்கத்திற்கான மத்திய அரசின் நிதிக் கணக்கைக் கேட்பதற்கு முன் பி.எம். கேர் நிதியின் கணக்கை வெளியிடுங்கள் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் விமர்சனத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பதிலளித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நட்டா ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் ஊழல் நிலவி வருவதாகத் தெரிவித்த நட்டா, மத்திய அரசால் வழங்கப்பட்ட ரூ.1000 கோடிக்கு உரிய கணக்கு வரவில்லை எனவும் மத்திய அரசின் கேள்விகளுக்கு பயந்து அவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, “ பாஜகவினருக்கு வேறு வேலை இல்லை. தற்போது நட்டா வந்துள்ளார். என்னிடம் மத்திய அரசின் நிதி குறித்து கணக்கு கேட்பதற்கு முன்பாக பி.எம். கேர் நிதி குறித்த கணக்கை வழங்குங்கள்” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.