சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி

இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தாத்தாவாகியுள்ளார். 

News image
தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி
Updated On :10 டிசம்பர் 2020, 11:03 am

DIN


புது தில்லி: இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தாத்தாவாகியுள்ளார். 

அவரது மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Story image

மும்பையில் ஷ்லோகா - ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அம்பானி குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Story image

முகேஷ் அம்பானி (63) - மனைவி நீட்டாவுக்கு மூன்று பிள்ளைகள். 29 வயதாகும் ஆகாஷ், இஷா இருவரும் இரட்டையர்கள். ஆனந்த் (25) மூன்றாவது மகன். ஆகாஷ், ரஷ்ஷெல் மேத்தாவின் மகளான ஷ்லோகாவை கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி - நீதா தம்பதி முதல் முறையாக தாத்தா - பாட்டியாகியுள்ளனர். திருபாய் - கோகிலாபென் அம்பானிக்கு கொள்ளுப் பேரன் பிறந்திருப்பதால் முகேஷ் அம்பானி தம்பதி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Story image

குழந்தை பிறந்திருப்பதால் மேஹ்தா மற்றும் அம்பானி குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.