சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

திருமணமான மறுநாள் மணமகன் பலி; மணமகள் உள்பட 8 பேருக்கு கரோனா உறுதி

திருமணம் முடிந்த மறுநாளே உடல் நலக் குறைவால் மணமகன் பலியாக, மணமகள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

திருமணமான மறுநாள் மணமகன் பலி; மணமகள் உள்பட 8 பேருக்கு கரோனா உறுதி

Updated On :10 டிசம்பர் 2020, 5:17 am

ஃபிரோஸாபாத்: திருமணம் முடிந்த மறுநாளே உடல் நலக் குறைவால் மணமகன் பலியாக, மணமகள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேருக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 10 நாள்களுக்கு முன்பு நாக்லா சவந்தி கிராமத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த நிலையில் மணமகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு டிசம்பர் 4-ம் தேதி உயிரிழந்துவிட்டார். ஆனால் அவருக்கு கரோனா இருந்ததா என்பது உறுதி செய்யப்படாமலேயே இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டன.

பிறகு, குடும்பத்தினரை பரிசோதனை செய்ததில், மணமகள், இறந்தவரின் தாய், சகோதரர் உள்பட குடும்பத்தில் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.