அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் இயங்கிவரும் ஏபிசி செய்தி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேனலின் தொகுப்பாளராக இருப்பவர் ஜிம்மி கிம்மல். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நகைச்சுவைப் பேச்சாளராகவும் இருக்கும் இவர், அந்தச் சேனலில் ‘ஜிம்மி கிம்மல் லைவ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விடுதியில் கடந்த சனியன்று (ஏப்ரல் 25) அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாகிச்சூடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அந்நிகழ்வில் கலந்துகொண்ட டிரம்ப், அவர் மனைவி மெலனியா டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அந்நிகழ்வு நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு டிரம்ப் மனைவியான மெலனியா டிரம்ப்பை ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் ‘விதவையாக எதிர்பார்க்கப்படுபவர்’ என்று விமர்சித்திருந்தது சர்ச்சையாகியுள்ளது.
ஜிம்மி கிம்மல் தனது நிகழ்ச்சியில் மெலனியா டிரம்ப் மற்றும் அவரது மகன் பாரோன் அங்கு அமர்ந்திருப்பதைப் போன்று விடியோ காட்சிகளைக் காண்பித்து அந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் பேசிய இரு நாள்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது சர்ச்சையானது.
இதுபற்றி அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நகைச்சுவை உணர்வு இல்லாத ஜிம்மி கிம்மல், தனது நிகழ்ச்சியில் ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் முதல் பெண்மணியான மெலானியாவை ஒரு எதிர்பார்க்கப்படும் விதவையைப் போல அழகாக பொலிவுடன் இருக்கிறீர்கள் என கிம்மல் கூறியுள்ளார்.
அதற்கு ஒரு நாள் கழித்து ஒருவர் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கலந்துகொண்டஒருவர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றார். அந்த நபர் மிகவும் வெளிப்படையான, கொடூரமான நோக்கத்துடன் அங்கு வந்திருந்தார்.
கிம்மலின் இழிவான பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவிப்பதை நான் பாராட்டுகிறேன். அவர் சொல்வதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர் செய்திருய்ப்பது எல்லை மீறிய செயல்.
ஜிம்மி கிம்மலை டிஸ்னி மற்றும் ஏபிசி நிறுவனம் உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மெலனியா டிரம்ப், “கிம்மலின் வன்முறை நிறைந்த வெறுப்பு பேச்சுக்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டவை. என் குடும்பத்தைப் பற்றிய அவரது பேச்சு வெறும் நகைச்சுவையல்ல. அவரது வார்த்தைகள் மிக மோசமான அரசியல் சீர்கேட்டை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை.
கிம்மலைப் போன்றவர்கள் ஒவ்வொரு நாளும் வெறுப்பைப் பரப்ப நம் வீடுகளுக்குள் நுழையும் வாய்ப்பை நாம் அவர்களுக்குத் தரக்கூடாது.
அவர் ஒரு கோழை. ஏபிசி நிறுவனத்துக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். அந்நிறுவனம் அவரைத் தொடர்ந்து ஆதரவளித்து பாதுகாக்கும் என்பது அவருக்குத் தெரியும்.
இதில், ஏபிசி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது. நம் சமூக நலனுக்கு எதிராகப் பேசும் கிம்மலின் நடத்தையை ஏபிசி தலைமை எத்தனை முறை அனுமதிக்கும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Trump Demands Dismissal of Program Host
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்

அதானிக்கு எதிரான வழக்கு: முடித்துவைக்க அமெரிக்க அரசு ஒப்புதல்

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்!!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
