தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு

உலகின் தலைசிறந்த ராணுவமாக அமெரிக்கா விளங்குவதாக டிரம்ப் பேசியது குறித்து...

Donald trump

கைது செய்யப்பட்டவர் / டொனால்ட் டிரம்ப் - Truth Social @Donald J. Trump

Published On :26 ஏப்ரல் 2026, 10:53 am IST

உலகின் தலைசிறந்த ராணுவமாக அமெரிக்கா விளங்குவதாக டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்பட சுமார் 2,600 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இரவு விருந்தில் அடையாளம் தெரியாத ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, துரிதமாகச் செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரையும் கைது செய்தனர்.

டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நாங்கள் மட்டும் இந்த நிலையில் இல்லை. மற்ற அனைத்து நாடுகளில் நடக்கும் வன்முறைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

வேறு நாட்டைச் சார்ந்த ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அங்கே உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

வர்த்தகத்திலும் ராணுவத்திலும் நாங்கள் உலகை வழிநடத்துகிறோம். அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவமாக விளங்குகிறது.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஒருவேளை அவர்களுக்கு அணு ஆயுதம் வழங்கப்பட்டால், அதனுடன் ஒப்பிடும்போது மற்ற அனைத்தும் ஒன்றுமே இல்லை. அவர்கள் சற்றும் தயக்கமின்றி அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள்.

நம்மால் அதைச் செய்ய முடியாது. என் பதவிக்காலத்தில் இது நடந்திருக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது, ​​நாங்களும் ஒரு இலக்காகி விடுகிறோம். அதைச் செய்யாமல் இருந்திருந்தால், நான் இலக்காக இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால், நான் இதில் பெருமை கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Summary

While an unidentified individual suddenly opened fire on him, Trump asserted that the United States stands as the world's premier military power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.