ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆம் ஆத்மி அமைச்சர்கள் இல்லம் முன்பு பாஜக போராட்டம்

ஆம் ஆத்மி அமைச்சர்கள் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
ஆம் ஆத்மி அமைச்சர்கள் இல்லம் முன்பு பாஜக போராட்டம்
Updated On :11 டிசம்பர் 2020, 10:24 am

DIN

ஆம் ஆத்மி அமைச்சர்கள் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையின் கீழ் பணிபுரியும் அமைச்சர்களின் இல்லங்களில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி துணை முதல்வர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஒருகட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் நுழைந்து மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இல்லம் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு தில்லி மேயர்களான ஜெய்பிரகாஷ், அனாமிகா மிதிலேஷ், நிர்மல் ஜெயின் மற்றும் ஏராளமான பெண் கவுன்சிலர்களுடன் கேஜரிவால் இல்லத்தின் முன்பு அமர்ந்து கடந்த 5 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.13,000 கோடியை விடுவிக்க வேண்டும், நகராட்சி நிர்வாக ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.