ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘மாநில அரசின் சார்பில் யாரும் ஆஜராக மாட்டார்கள்’: மத்திய அரசிற்கு மம்தா பதிலடி

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு அனுப்பிய சம்மனுக்கு மாநில அரசின் சார்பில் யாரும் ஆஜராக மாட்டார்கள் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

News image
‘மாநில அரசின் சார்பில் யாரும் ஆஜராக மாட்டார்கள்’: மத்திய அரசிற்கு மம்தா பதிலடி
Updated On :11 டிசம்பர் 2020, 3:32 pm

DIN

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு அனுப்பிய சம்மனுக்கு மாநில அரசின் சார்பில் யாரும் ஆஜராக மாட்டார்கள் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக மேற்குவங்கம் சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் வியாழக்கிழமை வைர துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனம் கற்களால் தாக்கப்பட்டது.

இதுகுறித்து நேரில் விளக்கமளிக்குமாறு மேற்கு வங்க மாநில தலைமை செயலர் மற்றும் காவல்துறை தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க மாநில அரசின் சார்பில் யாரையும் தில்லிக்கு அனுப்பப்போவதில்லை என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க அரசு மற்றும் மத்திய அரசு இடையே தொடரும் பனிப்போர் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.