சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

'மக்களிடம் கரோனா பெருந்தொற்றின் மீதான அச்சம் குறைந்து வருகிறது'

மக்களிடம் கரோனா பெருந்தொற்றின் மீதான அச்சமும் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

US daily death toll from COVID-19 tops 3000

Updated On :11 டிசம்பர் 2020, 6:59 am


பனாஜி: மக்களிடம் கரோனா பெருந்தொற்றின் மீதான அச்சமும் குறைந்து வருகிறது என்று கோவா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஷிவானந்த் பன்டேகர் இது பற்றி கூறுகையில், சமீபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அது எப்படி என்று விசாரித்ததில், குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்வோர், முகக்கவசம் அணிவதில்லை. இதுதான் பலருக்கும் கரோனா தொற்றுப் பரவ மிக முக்கியக் காரணமாக மாறிவிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று மெல்லக் குறைந்து வருவதால், சளி, காய்ச்சல் போலவே கரோனா தொற்றையும் மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்ள ஆரம்பிவித்துவிட்டனர்.

மக்கள் மனதில் இருந்த கரோனா பெருந்தொற்றின் மீதான அச்சமும் குறைந்து வருகிறது. விரைவில் அது காணாமலே போகலாம், அதுதான் தற்போதைய அலட்சியப் போக்குக்குக் காரணம்.

ஆனால், தற்போதும் கரோனா தொற்றுப் பரவல் இருந்த வருகிறது. பல இடங்களில் இரண்டாம் அலை வீசுகிறது. இது மக்களின் இந்த பயமற்றத் தன்மையே காரணம், எனவே, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை, அடுத்தடுத்த அலைகள் வீசுவதைத் தடுக்க முடியும்.

கோவாவில், வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 95 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்த, அங்கு ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 49,131 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 703 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.