நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீர்: ராணுவம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் நலன் கருதி ராணுவம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 1,400 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்: ராணுவம் சார்பில் மருத்துவ முகாம்
Updated On :12 டிசம்பர் 2020, 11:37 am

DIN


ஜம்மு-காஷ்மீரில் மக்கள் நலன் கருதி ராணுவம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 1,400 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.

மேலும் வீட்டு வளர்ப்பு விலங்குகளை பராமரிக்கும் வகையில், கால்நடை மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. 

ஜம்மு-காஷ்மீரின் சத்ரு மற்றும் ஷெர்க்வாரி பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ராணுவ மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை முதல் நடைபெற்ற இந்த முகாமில், 1422 நோயாளிகளும், 235 குழந்தைகளும் பலன் பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கால்நடை மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 276 வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டன.

மேலும் மருந்துகளும், கரோனா தடுப்பு உபகரணங்களும் ராணுவம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.