கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார்.
கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறிய இடைவேளைக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரோனா தடுப்பூசிக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதுவே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய மாநிலமாக கேரளமும் இதனை அறிவித்துள்ளது.
பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசி பரிந்துரையில் இருப்பதாக மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


