ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கேஜரிவால் இல்லம் முன்பு நீடிக்கும் பாஜக போராட்டம்

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜகவினர் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
கேஜரிவால் இல்லம் முன்பு நீடிக்கும் பாஜக போராட்டம்
Updated On :12 டிசம்பர் 2020, 10:53 am

DIN

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜகவினர் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.13,000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி தில்லியின் பல்வேறு பகுதிகளில் மேயர்கள் உள்பட பாஜகவினர் பலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சேரவேண்டிய ஊதியத்தை விடுவிக்கக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று (சனிக்கிழமை) தில்லி முதல்வர் இல்லம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில பாஜக தலைவர் அதேஷ் குப்தா கூறியதாவது,

''நிலுவையிலுள்ள முழுத்தொகையான ரூ.13,000 கோடியை விடுவிக்கும் வரை பாஜக தனது போராட்டத்திலிருந்து பின்வாங்காது. 

கரோனா காலத்தில் வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியம் வழங்கும் வரை தில்லியின் 70 தொகுதிகளிலும் போராட்டம் நடைபெறும்'' என்று கூறினார்.

முன்னாள் மாநில பாஜக தலைவரும், வடகிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரியும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.