வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாதுகாப்பு சவால்களை இந்தியா சமாளிக்கும்

பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவிடமிருந்து எழும் சவால்களை இந்தியா சமாளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2020, 1:16 am

DIN

பாதுகாப்பு விவகாரங்களில் சீனாவிடமிருந்து எழும் சவால்களை இந்தியா சமாளிக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்திய தொழிலக, வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆண்டுக் கூட்டத்தினிடையே சனிக்கிழமை நடைபெற்ற காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் கூறியதாவது:

ஏழு மாதங்களாக கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடித்து வருகிறது. இந்தியாவின் உறுதியை சீனா சோதித்துப் பாா்த்து வருகிறது.

தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் இதுபோன்ற சவால்களை இந்தியா வெற்றிகரமாக சமாளிக்கும். லடாக் எல்லையில் நடைபெற்ற நிகழ்வுகள் விரும்பத்தகாதவை மட்டுமின்றி, கவலைக்குரியவையும் ஆகும்.

இந்த விகாரத்தில் நீண்டகாலத் தீா்வோ, திருப்பு முனையோ ஏற்படும் என்று ஊகித்துக் கூற விரும்பவில்லை. இருந்தாலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீடித்த அந்த மோதல் சீன நலன்களுக்குத்தான் பாதகமாக இருந்தது. காரணம், அந்த நிகழ்வுகளால் இந்தியா்களிடையே சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு அதிகரித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் அதற்கு உதவியுள்ளது. இரு தரப்பினரும் மிகக் கவனமாக உருவாக்கி வைத்துள்ள பரஸ்பர நம்பிக்கை குலையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டியது மிகவவும் அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.