பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது: மம்தா

​பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா பேசியது:

"நாங்கள் மேற்கு வங்க மக்களுக்காகப் பணியாற்றியுள்ளோம். அவர்கள் எப்போதும் எங்களைத் திருடர்கள் என்றே குற்றம்சாட்டுவார்கள். ஆனால், பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது.  அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள்.

ஹிந்து, முஸ்லிம், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இடையே வேறுபாட்டை ஊக்குவிப்பார்கள். இதைத்தான் அவர்கள் செய்வார்கள். 

கடந்த 6 வருடங்களாக அவர்கள் தில்லியில் ஆட்சியில் உள்ளனர். 2014, 2016 மற்றும் 2018 தேர்தல்களில் ஜல்பாய்குரி-அலிபுர்தாரில் தேநீர் தோட்டங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். குறைந்தது 2 லட்சம் வேலைகளையாவது அவர்கள் கொடுத்தார்களா? 2014 தேர்தலில் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். நிறைவேற்றினார்களா? அவர்கள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார்கள்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com