ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விவசாயிகளின் போராட்டத்தில் மத்திய அரசு பிடிவாதம்: தில்லி அமைச்சர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதாக தில்லி பொதுநிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி பொதுநிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கோபால் ராய் (கோப்புக்காட்சி)
Updated On :16 டிசம்பர் 2020, 10:41 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதாக தில்லி பொதுநிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திற்கு உதவும் வகையிலான பணிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 21-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் சிங்கு எல்லைப் பகுதியை அமைச்சர் கோபால் ராய் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ''மூன்று வாரங்களுக்கும் மேலாக விவசாயிகள் எல்லைப் பகுதியில் கடும் குளிருக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேஜரிவால் தலைமையிலான அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எங்களது தன்னார்வலர்களும், கட்சி எம்.எல்.ஏ.க்களும் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர். 

விவசாயிகளுக்கு உதவும் வகையில் சமையல் கூடங்கள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. நாட்டிற்கே உணவளித்தவர்கள் விவசாயிகள். அவர்கள் போராடும் நிலைக்கு வந்துள்ளது துரதிருஷ்டவசமானது.

விவசாயிகள் 20 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். மத்திய அரசு தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.