ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ்: மம்தா
மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்றது திரிணமூல் காங்கிரஸ் கட்சி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பேசிய அவர், தாய், மண், மக்கள் ஆகிய மூன்று கூறுகளும் ஏமாற்றாது, துரோகமிழைக்காது அல்லது பொய்கூறாது என்று குறிப்பிட்டார்.
பொய்கூறி வாக்குகளை வாங்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னதை நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்கள் கட்சியின் சபதம்.
சில சமூக விரோதிகள் மேற்கு வங்கத்தினுள் நுழைந்துள்ளனர். காவல்துறையினரை அவர்கள் மிரட்டுகின்றனர். சில நேரங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரையும் மிரட்டுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஆலமரம் போன்று தனது வேர்களை திரிணமூல் அரசு நிலைநாட்டியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்த கட்சிக்கு தாவுகின்றனர்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...