உ.பி.: மதுபானத்திற்காக மணமகனை கொன்ற நண்பர்கள்
உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த மணமகனை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசத்தில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த மணமகனை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நாளன்று மாலையில் மது அருந்தியிருந்த நண்பர்களை மணமகன் சந்திக்கச் சென்றபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திலுள்ள பாலிமுகிம்பூர் கிராமத்தில் 28 வயதான பாப்லு என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.
இதனிடையே திருமணம் நடைபெற்ற நாளன்று மாலையில் ஏற்கனவே போதையிலிருந்த நண்பர்களை சந்திப்பதற்காக சென்றபோது, அவர்கள் குடிப்பதற்கு அதிக அளவு மதுபானங்களை ஏற்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு மணமகன் மறுப்பு தெரிவித்த நிலையில், வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர் மணமகனை சரமாறியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான ராம்கிலாடியை கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து நண்பர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...