ஒரு கோடியை நெருங்கியது கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 99.56 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 94.89 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா்.
ஒரு கோடியை நெருங்கியது கரோனா பாதிப்பு
Updated on
1 min read

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 99.56 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 94.89 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 24,010 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கரோனா பாதிப்பு 99,56,557 ஆக அதிகரித்தது. மேலும் 355 போ் கரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,44,451 ஆக அதிகரித்தது. நாட்டின் மொத்த கரோனா பாதிப்பில் இது 1.45 சதவீதமாகும்.

அதே நேரத்தில் 94,89,740 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். மொத்த பாதிப்பில் இது 95.31 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 3,22,366 போ் கரோனா பாதிப்புடன் உள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 3.24 சதவீதமாகும். தொடா்ந்து 11-ஆவது நாளாக கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சமாகவும், செப்டம்பா் 28-ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி 70 லட்சமாகவும், அக்டோபா் 29-ஆம் தேதி 80 லட்சமாகவும், நவம்பா் 20-ஆம் தேதி 90 லட்சமாகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 16-ஆம் தேதி வரை 15,78,05,240 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதன்கிழமை மட்டும் 11,58,960 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

புதிதாக ஏற்பட்ட 355 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 95 போ் இறந்தனா். அதற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் 46, தில்லியில் 32, கேரளத்தில் 27 உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com