விவசாயிகளுக்கு போராட உரிமையுள்ளது: உச்சநீதிமன்றம்
எந்தவொரு தனிநபரையும் பாதிக்காமல் போராடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமையுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


எந்தவொரு தனிநபரையும் பாதிக்காமல் போராடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமையுள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்து வரும் நீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மட்டுமே இன்று விசாரித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சட்டங்களுக்கு எதிராக போராட அரசியல் சாசனம் அனுமதிப்பதாகவும், எந்தவொரு நபரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...