இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் தடம்: மோடி, ஷேக் ஹசீனா தொடக்கி வைப்பு

இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் தடத்தை பிரதமர் நரேந்திர மோடி - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இணைந்து தொடக்கி வைத்தனர்.
இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் தடம்: மோடி, ஷேக் ஹசீனா தொடக்கி வைப்பு
இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் தடம்: மோடி, ஷேக் ஹசீனா தொடக்கி வைப்பு
Updated on
1 min read


புது தில்லி: இந்தியா - வங்கதேசம் இடையே புதிய ரயில் தடத்தை பிரதமர் நரேந்திர மோடி - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இணைந்து தொடக்கி வைத்தனர்.

அண்டைநாடுகளான இந்திய - வங்கதேச எல்லைகளை இணைக்கும் வகையில் சிலாஹதி - ஹல்திபாரி இடையே இருந்த பழைய ரயில் பாதை புதுப்பிக்கப்பட்ட நிலையில், இரு தலைவர்களும் இன்று தொடக்கி வைத்தனர். இந்த ரயில் பாதை சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு நாடுகளை இணைக்கும் ஐந்தாவது இணைப்புப் பாதையாகும் இது. 

மேலும், பங்கபந்து - பாபு இணைய கண்காட்சி மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவு அஞ்சல்தலையையும் வெளியிட்டனர்.

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவுடன் இன்று காணொலி வழியாக சந்தித்துப் பேசினார். இந்த மாநாட்டில், பல்வேறு துறை சாா்ந்த இரு நாட்டு உறவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

முன்னதாக இன்று நடைபெறும் மாநாடு குறித்து மத்திய அமைச்சகம் கூறியிருந்ததாவது, 

இந்தியா - வங்கதேசம் இடையான உறவு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே வா்த்தகம், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேம்பட்டிருப்பதோடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

இந்தச் சூழலில், பிரதமா் மோடியும், வங்கதேச பிரதமரும் வியாழக்கிழமை மேற்கொள்ளும் ஆலோசனையில், இரு நாட்டு உறவு குறித்து தலைவா்கள் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனா். கரோனா பாதிப்புக்கு பிறகான காலத்தில், இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவா்கள் ஆலோசிக்க உள்ளனா் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com