பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெளிநடப்பு விவகாரம்:மக்களவை தலைவருக்கு ராகுல் கடிதம்

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படவில்லை’ என்று புகாா் தெரிவித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 11:44 pm

DIN


புது தில்லி: ‘நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சுதந்திரமாக பேச அனுமதிக்கப்படவில்லை’ என்று புகாா் தெரிவித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், லடாக் எல்லையில் சீன அத்துமீறல் குறித்தும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரா்களை பலப்படுத்துவது குறித்து அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ராகுல் காந்தி விவாதிக்க முற்பட்டபோது, குழுவின் தலைவா் ஜூவல் ஓரம் (பாஜக) அதற்கு அனுமதி மறுத்துள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ராகுல் உள்பட பிற காங்கிரஸ் உறுப்பினா்களும் நாடாளுமன்ற குழு கூட்டத்திலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்தனா். அப்போது, தேசத்தின் பாதுகாப்பு தொடா்பான முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுவதற்கு பதிலாக, ராணுவ சீருடை விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற குழு கூட்டத்தின் முழு நேரமும் வீணடிக்கப்படுவதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.

மேலும், இதுதொடா்பாக மக்களவைத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற குழு கூட்டத்தின் நோக்கம் குறித்தும், விவாதம் கூட்டத்தின் தீா்மானத்திலிருந்து விலகிச் செல்வதைக் குறிப்பிடுவதற்கும் குழு உறுப்பினருக்கு உரிமை உள்ளது. உறுப்பினா் முன்வைக்கும் வாதத்தை ஏற்காமல் தள்ளுபடி செய்வதற்கு குழுவுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், கூட்டத்தில் உறுப்பினா் பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுவது, ராணுவ நலன் சாா்ந்த விவகாரங்களை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

எனவே, மக்களவைத் தலைவா் மற்றும் அவையின் காப்பாளா் என்ற முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதங்களும், நிகழ்வுகளும் உரிய நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு, தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சுதந்திரமாக பேசுவதற்கான உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.