பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அட்டாரி எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :17 டிசம்பர் 2020, 11:53 am

DIN

அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். 
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியான பஞ்சாபின் அட்டாரி எல்லை வழியாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாதுகாப்புப்படையினர் அவர்களை எச்சரித்தனர். 
ஆனால் அவர்கள் திடீரென, பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இந்த சம்பத்தை தொடர்ந்து எல்லையில் பஞ்சாப் காவலர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.